< Back
தேசிய செய்திகள்
தனது ஏ.ஐ. நடன வீடியோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
தேசிய செய்திகள்

தனது ஏ.ஐ. நடன வீடியோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு

தினத்தந்தி
|
8 May 2024 10:57 AM IST

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தனது நடன வீடியோ பதிவுக்கு பிரதமர் மோடியே வரவேற்பு அளித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களில் வெற்றிகரமாக நடந்து வரும்நிலையில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும்வகையில் வலைத்தளங்களில் மீம்கள், போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பல அரசியல் தலைவர்கள் இதற்கு எதிராக இருந்துவரும் நிலையில் பிரதமர் மோடி குறித்தான வீடியோவுக்கு அவரே வரவேற்பு தெரிவித்துள்ள நிகழ்வு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எக்ஸ் தளத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரதமர் மோடி நடனமாடும் வகையில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆரஞ்சு நிற மேல்சட்டை அணிந்துள்ள பிரதமர் மோடி வளைந்து நெளிந்து நடனம் ஆடியவாறு பிரமாண்ட மேடைக்கு வருகிறார். பின்னர் கோடிக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் துள்ளலான இசைக்கு குத்தாட்டம் போடுவதுபோல் உள்ளது.

மேலும் அதனோடு "இந்த பதிவுக்கு நான் கைது செய்யப்பட மாட்டேன் என நம்புகிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியானவுடனேயே காட்டுத்தீபோல பரவியது.

தற்போது இந்த பதிவுக்கு பிரதமர் மோடியே வரவேற்பு அளித்துள்ளார். தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் இருந்து அவர் அதற்கு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் "உங்களைபோல நானும் இதனை வெகுவாக ரசித்தேன். உச்சக்கட்ட வாக்கெடுப்பு காலத்தில் இத்தகைய படைப்பாற்றல் மகிழ்ச்சி அளிக்கிறது!" என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்