< Back
தேசிய செய்திகள்
டெல்லி: பாபர் சாலை பெயர் பலகையில் அயோத்தி சாலை என ஸ்டிக்கர் ஒட்டிய இந்து சேனா அமைப்பினர்
தேசிய செய்திகள்

டெல்லி: 'பாபர் சாலை' பெயர் பலகையில் 'அயோத்தி சாலை' என ஸ்டிக்கர் ஒட்டிய இந்து சேனா அமைப்பினர்

தினத்தந்தி
|
20 Jan 2024 1:02 PM IST

மத்திய டெல்லியில் பாபர் சாலை அமைந்துள்ளது.

டெல்லி,

மத்திய டெல்லியில் பாபர் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் பெயரை குறிக்கும் வகையில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாபர் சாலை பெயர் பலகையை சேதப்படுத்திய இந்து சேனா அமைப்பினர் அதில் அயோத்தி சாலை என எழுதியுள்ளனர். பாபர் சாலை என்று எழுதப்பட்டிருந்த பலகையின் மேலே அயோத்தி சாலை என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பாபர் சாலை பெயர் பலகை மீது ஒட்டப்பட்டிருந்த அயோத்தி சாலை என்ற ஸ்டிக்கரை டெல்லி மாநகராட்சி கவுன்சில் அதிகாரிகள் அகற்றினர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, பாபர் சாலை என்ற பெயரை மாற்ற வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருவதாக இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்