< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது மர்ம நபர்கள் தாக்குதல்
|16 Aug 2024 9:11 PM IST
பஞ்சாப்பில் காரில் சென்றுகொண்டிருந்த இமாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ மீது மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லா,
இமாசல பிரதேசம் குட்லேஹர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விவேக் சர்மா. இவர் ஜலந்தரில் இருந்து காரில் தனது சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் தன்னையும் தனது காரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். மேலும் காரின் பின்புற கண்ணாடியையும் அவர்கள் உடைத்துள்ளனர். இதையடுத்து எம்.எல்.ஏ.வின் கார் ஓட்டுநர் இருவரையும் சிறிது தூரம் துரத்திச் சென்றிருக்கிறார். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
பஞ்சாபில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம்ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.