< Back
தேசிய செய்திகள்
இமாசல பிரதேச முதல்-மந்திரி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி
தேசிய செய்திகள்

இமாசல பிரதேச முதல்-மந்திரி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதி

தினத்தந்தி
|
27 Oct 2023 4:40 PM IST

இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இமாசல பிரதேசத்தில் முதல்-மந்திரியாக இருப்பவர் சுக்விந்தர் சிங் சுகு. இவர் இன்று காலை 11.20 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வயிற்று வலி இருப்பதாக அவர் கூறியதை அடுத்து, இரைப்பை குடலியல்துறை மருத்துவப் பேராசிரியர் பிரமோத் கர்க் தலைமையிலான மருத்துவர்கள் அவரது உடல்நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். லேசான கணைய அழற்சி நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுக்விந்தர் சிங் சுகு, ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் செய்திகள்