< Back
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேசம்: மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசம்: மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

தினத்தந்தி
|
22 March 2024 4:34 PM IST

ராஜினாமா செய்த 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களித்தனர். இதனால் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, மாற்றி வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கடந்த பிப்ரவரி 29-ந்தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆஷீஷ் சர்மா, ஹோஷியார் சிங் மற்றும் கே.எல்.தாக்கூர் ஆகிய 3 பேரும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் 3 பேரும் பா.ஜ.க.வில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்