சூடுபிடிக்கும் இமாச்சலபிரதேச தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக - காங்கிரஸ்
|முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக மற்றும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளன.
சிம்லா,
68 இடங்களை கொண்ட இமாச்சலபிரதேச சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படுகிறது.
இதனிடையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இமாச்சலபிரதேச தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன.
இந்நிலையில், தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக , காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளன. அதன்படி, முதல்கட்டமாக பாஜக 62 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதேபோல், காங்கிரஸ் 46 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் 19 பேர் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது