< Back
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி

தினத்தந்தி
|
19 Dec 2022 12:18 PM IST

இமாச்சல் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிம்லா,

இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இமாச்சல் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்குவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு இன்று பிரதமர் மோடி சந்திக்க திட்டமிட்டிருந்தார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. பிரதமரை சந்திப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்படும் வழக்கமான பரிசோதனையின் போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச முதல்-மந்திரிக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இமாசலபிரதேச மாநிலத்தின் முதல்-மந்திரியாக கடந்த 11-ந் தேதி சுக்விந்தர் சிங் சுக்கு பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்