< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்
|11 Nov 2022 9:34 PM IST
மும்பை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை,
கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து மும்பைக்கு பயணித்த பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்திவருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட நபரின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டுவந்த டிராலி சூட்கேசில் ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.35 கோடி மதிப்புள்ள 4.98 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.