< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மேகாலயாவில் 14 கோடி மதிப்புள்ள 2 கிலோ ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
|18 Nov 2022 5:09 PM IST
மேகாலயா மாநிலத்தில் ஹெராயின் போதைப்பொருள் கடத்திய நபர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஷில்லாங்,
மேகாலயா மாநிலம் ரி-போய் மாவட்டத்தில் கடத்திவரப்பட்ட 2 கிலோ ஹெராயின் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ரஷிஜுதீன், சதாம் உசேன் மற்றும் இக்பால் உசேன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், மணிப்பூர் மாநிலத்தில் இருந்து ஷில்லாங்கிற்கு சாலை வழியாக ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இன்று அதிகாலை ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் நடத்திய சோதனையில் ஹெராயின் கடத்தப்படுவது தெரியவந்தது.
சுமார் 14 கோடி மதிப்புள்ள 2 கிலோ ஹெராயின் போதைப் பொருளை 158 சோப்பு டப்பாக்களில் மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.