< Back
தேசிய செய்திகள்
அசாம்: ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தேசிய செய்திகள்

அசாம்: ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தினத்தந்தி
|
17 Nov 2023 4:12 PM IST

மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

காம்ரூப்,

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நேற்று இரவு சிறப்பு அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் சுமார் 11 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

இதுபற்றி காவல்துறை செய்தித் தொடர்பாளர் பிரணாப்ஜோதி கோசுவாமி கூறியதாவது,

மணிப்பூரில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில், சிறப்பு அதிரடிப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஜெனரல் பார்த்த சாரதி மஹந்தா தலைமையிலான சிறப்பு அதிரடிப் படை, அமிங்கானில் சோதனைச் சாவடியை அமைத்திருந்தது. நேற்று இரவு மணிப்பூரில் உள்ள சுராசந்த்பூரில் இருந்து வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, அந்த வாகனத்தின் ரகசிய அறையிலிருந்த 98 சிறிய பைகளில் 1.35 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அந்த பைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கவுகாத்தியில் உள்ள கானாபராவிலும் சோதனை நடத்தினர். இரண்டு பெண்கள் மீது சந்தேகம் வந்ததால் அவர்களை சோதனை செய்தபோது 54.5 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்த 43 குப்பிகளை கைப்பற்றினர். இது தொடர்பாக 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்