< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத் கடற்பகுதியில் பாகிஸ்தான் படகில் கடத்தி வரப்பட்ட ரூ.360 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!
|8 Oct 2022 3:30 PM IST
குஜராத் கடற்பகுதியில் சோதனை நடத்தியதில் பாகிஸ்தான் படகில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது.
ஆமதாபாத்,
குஜராத் கடற்கரை பகுதியில் சென்ற பாகிஸ்தான் படகில் ரூ.360 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
முன்னதாக, கொச்சி கடற்கரையில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள ஹெராயினை கடற்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், குஜராத் கடற்கரை பகுதியில், சர்வதேச கடல் எல்லைக்கோடு பகுதியில், இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது.
அதில் சோதனை நடத்தியதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.360 கோடி ஆகும். இதனையடுத்து அந்த படகையும், அதில் இருந்த 6 பேரையும் கைது செய்தனர்.