< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"ஹலோ... மேனேஜர் எங்க இருக்கீங்க..." அலுவலகத்திற்குள் நுழைந்த சிங்கம் - வைரல் வீடியோ
|26 Feb 2023 10:19 AM IST
குஜராத்தில் அலுவலகத்திற்குள் சிங்கம் ஒன்று நுழைந்தது.
குஜராத்,
குஜராத் மாநிலம் ராஜுலாவில் தனியார் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்போது திடீரென ஒரு சிங்கம் அலுவலகத்திற்குள் நுழைந்தது. இதனை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சிங்கம் அலுவலகத்தில் உள்ள ஓவ்வொரு அறைக்கும் சென்று உலாவியது. அதன் பின்னர் தானாகவே சிங்கம் வெளியேறியது.
இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிரும் பலரும், "ஒருவேளை வேலைக்கேட்டு மேனேஜரை தேடி வந்திருக்குமோ" என நகைச்சுவை செய்து வருகிறனர்.