< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் ஹெலிகாப்டர் விபத்து; 3 பேர் பலி என அச்சம்
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஹெலிகாப்டர் விபத்து; 3 பேர் பலி என அச்சம்

தினத்தந்தி
|
2 Oct 2024 9:41 AM IST

மராட்டியத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் அதில் பயணம் செய்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி,

மராட்டியத்தின் புனே நகரில் ஆக்ஸ்போர்டு ஹெலிபேடில் இருந்து அகஸ்டா 109 ரக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் மற்றும் விமான பராமரிப்பு என்ஜினீயர் என 3 பேர் பயணித்து உள்ளனர்.

வேறு பயணிகள் யாரும் அதில் செல்லவில்லை. இந்நிலையில், அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. தீப்பிடித்து எரிந்தபடியே கீழே விழுந்தது. இதில், 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் விமானிகளான கேப்டன் பிள்ளை மற்றும் கேப்டன் பரம்ஜித் ஆகிய இருவரும் உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. என்ஜினீயரின் நிலை பற்றியும் தெரிய வரவில்லை. தொடர்ந்து தகவல்களை உறுதி செய்யும் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது என விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்