< Back
தேசிய செய்திகள்
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
20 Jan 2024 5:29 PM IST

சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றார்.

அமரவாதி,

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி பொதுக்கூட்டங்களை முழு வீச்சில் நடத்தி வருகின்றன. அந்தவகையில் ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஜனஜன சக்தி கட்சியுடன் கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு என்ற பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் வழி தவறி வேறு பாதையில் சென்றுள்ளது. இதனை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், பைலட்டுக்கு எச்சரிக்கை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையை அடுத்து ஹெலிகாப்டர் மீண்டும் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு சென்று பாதுகாப்பாக தரையிறங்கியது.

மேலும் செய்திகள்