< Back
தேசிய செய்திகள்
அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை
தேசிய செய்திகள்

அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை

தினத்தந்தி
|
23 Jun 2022 5:57 PM IST

அக்டோபர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டால் பள்ளி, அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கும் நிலை வரும். இருப்பினும் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரை தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

குளிர்காலங்களில் அதிகரிக்கும் காற்றுமாசுபாட்டை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்