< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு - 26 ரெயில்கள் தாமதம்
|2 Jan 2024 10:21 AM IST
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உட்பட 26 ரெயில்கள் அதிகபட்சமாக 6மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது
புதுடெல்லி,
வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.சாலைகளில் முழுவதுமாக பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் பகல் நேரங்களிலும் விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றன.
இந்த நிலையில், கடுமையான பனிப்பொழிவால் இன்று டெல்லிக்கு வரும் ரெயில்களின் நேரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உட்பட 26 ரெயில்கள் அதிகபட்சமாக 6மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது