< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியப்பிரதேசத்தை புரட்டிப்போட்ட கனமழை: நர்மதா ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்...!
|17 Aug 2022 9:29 PM IST
கனமழையால் நர்மதா ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
போபல்,
மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழையால் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் அணைகள் நிரம்பியுள்ளன.
அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பால்கர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கனமழையால் நர்மதா ஆற்றில் இருந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுவட்டார கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், மீட்பு படையினர் தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.