< Back
தேசிய செய்திகள்
இமாச்சல பிரதேசத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
தேசிய செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தினத்தந்தி
|
13 Aug 2023 10:41 PM IST

கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் வடகிழக்குப் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஆகஸ்ட் 14-ந்தேதி (நாளை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த முதுகலை மற்றும் பி.எட். தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்