< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கனமழை எச்சரிக்கை: கேரளா விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை
|1 July 2023 7:58 AM IST
னமழை எச்சரிக்கையை தொடர்ந்து, கேரளாவிற்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது.
திருவனந்தபுரம்,
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து கேரளாவிற்கு தேசிய பேரிடர் மீட்புப்படை விரைகிறது. மீட்புப்பணியில் ஈடுபட ஏதுவாக ஒரு குழுவுற்கு 25 பேர் என 175 பேர் கொண்ட 7 குழுக்கள் கேரளா சென்றுள்ளது.