< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் 9-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
|7 July 2022 10:53 AM IST
கேரளாவில் வருகிற 9-ந் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கேரளாவில் வருகிற 9-ந் தேதி வரை கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாகவும், மலையோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்றும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.