< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அரியானாவில் கடும் பனிமூட்டம்; அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து
|18 Dec 2022 4:43 PM IST
அரியானாவில் கடும் பனிமூட்டம் காரணமாக அடுத்தடுத்து 8 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.
சண்டிகர்,
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் பருவமழை முடிந்து, பனிக்காலம் தொடங்கியுள்ளது. இதனால், காலையிலேயே கடும் பனிமூட்டம் ஏற்பட்டு அது சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், அரியானாவின் யமுனா நகர் பகுதியில் அவுரங்காபாத் கிராமம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பனிமூட்டம் எதிரொலியாக அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கின.
இந்த சம்பவத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் மோதி உள்ளன. இதுபற்றி போலீசார் கூறும்போது, 10 முதல் 15 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு இருக்க கூடும். ஆனால், 7 முதல் 8 வாகனங்களே காணப்படுகின்றன என கூறியுள்ளனர்.
இது பனிக்காலம் என்பதனால், மெதுவாக வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் என்று மக்களை கேட்டு கொள்கிறேன் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.