< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் கடும் பனிமூட்டம்:  22 ரெயில்கள் தாமதம்

கோப்புப்படம் PTI

தேசிய செய்திகள்

டெல்லியில் கடும் பனிமூட்டம்: 22 ரெயில்கள் தாமதம்

தினத்தந்தி
|
7 Jan 2024 10:37 AM IST

தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது.

புதுடெல்லி,

வட இந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. அதிகாலை மற்றும் இரவு வேளையில் குளிரின் அளவு அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் உள்ளதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று காலை டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.டெல்லி ரெயில் நிலையத்திற்கு வரும் ஜம்முதாவி-டெல்லி விரைவு ரெயில் உள்பட 22 ரெயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்