< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வெப்ப அலை எதிரொலி: பீகாரில் ஜூன் 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
|29 May 2024 9:52 PM IST
வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் வரும் ஜூன் 8-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா,
வட இந்தியாவில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. பிகாரின் ஷோக்பூரா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இன்று வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் மாணவ, மாணவியர் பலர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகார் மாநிலத்தில் வரும் ஜூன் 8-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெப்ப அலை பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.