< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
வெப்ப அலை எதிரொலி: பகல் 12-5 மணி வரை திறந்த வெளியில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - மராட்டிய அரசு உத்தரவு

20 April 2023 9:23 AM IST
மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மராட்டிய மாநிலம் நவி மும்பையில், சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்ற விழாவில் கடும் வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்து 13 பேர் உயிரிழந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 24 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மராட்டியத்தில் வெப்ப அலை காரணமாக பிற்பகல் 12 மணி முதல் 5 மணி வரை திறந்த வெளியில் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வானிலையின் தாக்கம் மேம்பட்ட பிறகே, இந்த முடிவிலிருந்து மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.