< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: டெல்லி ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு
|3 Aug 2022 1:53 AM IST
2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட் செப்டம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.
புதுடெல்லி,
2ஜி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வு முன் நேற்று பட்டியலியிடப்பட்டு இருந்தன.
இந்த மனுக்களை பரீசிலித்த நீதிபதி, மேல்முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பு வாதங்களை அடுத்த மாதம் (செப்டம்பர்) 22, 23-ந்தேதிகளில் முன்வைக்க அனுமதி அளித்து, விசாரணையை செப்டம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.