< Back
தேசிய செய்திகள்
குலாம் நபி ஆசாத் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டி துரோகம் செய்து விட்டார் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
தேசிய செய்திகள்

குலாம் நபி ஆசாத் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டி துரோகம் செய்து விட்டார் - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

தினத்தந்தி
|
26 Aug 2022 4:00 PM IST

தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி உண்மை முகத்தை வெளிக்காட்டி துரோகம் செய்து விட்டார் குலாம் நபி ஆசாத் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான குலாம் நபி ஆசாத் அறிவித்திருந்தார். குலாம் நபி ஆசாத் விலகல் என்பது கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சியில் இருந்து விலகியதை அடுத்து ராகுல் காந்தி மீது பல்வேறு குற்றசாட்டுகளை குலாம் நபி ஆசாத் முன்வைத்துள்ளார். இதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், காங்கிரஸ் தலைமையால் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்ட நபர், தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தியிருப்பது அவரின் உண்மை முகத்தை வெளிக்காட்டுகிறது என கட்சியில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துள்ளார் குலாம் நபி ஆசாத் என்று குற்றசாட்டியுள்ளார். மேலும்,நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த காங்கிரஸ் அமைப்பும் பாஜகவை எதிர்த்து போராடும் போது, குலாம் நபி ஆசாத் விலகி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

மேலும் செய்திகள்