< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாடு, கர்நாடகத்தை தொடர்ந்து மற்றொரு மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

தமிழ்நாடு, கர்நாடகத்தை தொடர்ந்து மற்றொரு மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை

தினத்தந்தி
|
17 March 2024 1:04 AM IST

உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

சிம்லா,

கடந்த மாதம் தமிழ்நாட்டில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாயை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் கலந்திருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பஞ்சு மிட்டாய் தயாரிப்பு, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்திலும் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சுரியன் ஆகிய உணவு பொருட்களுக்கு அந்த மாநில அரசு தடைவிதித்தது.

இந்நிலையில் இமாசல பிரதேசத்திலும் தற்போது பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பஞ்சு மிட்டாய் கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் உண்ணத்தகாத வேதிப்பொருட்கள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பஞ்சு மிட்டாய் தயாரிப்பு, விற்பனைக்கு ஒரு ஆண்டு தடைவிதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்