< Back
தேசிய செய்திகள்
நடுவானில் பயணிக்கு உடல்நலம் பாதிப்பு; ஓமன் சென்ற விமானம் நாக்பூரில் அவசர தரையிறக்கம்
தேசிய செய்திகள்

நடுவானில் பயணிக்கு உடல்நலம் பாதிப்பு; ஓமன் சென்ற விமானம் நாக்பூரில் அவசர தரையிறக்கம்

தினத்தந்தி
|
15 Sept 2024 10:51 PM IST

சலாம்ஏர் விமானத்தில் பயணிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதும், அந்த விமானம், நாக்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

நாக்பூர்,

வங்காளதேச நாட்டில் இருந்து ஓமன் நாட்டை நோக்கி சலாம்ஏர் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணித்த முகமது கெயிர் (வயது 33) என்ற நபருக்கு 2 முறை திடீரென உடல்நிலை பாதித்து உள்ளது.

இதனால், உடனடியாக அவருக்கு அவசரகால மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த விமானம், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதன்பின் கிம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ருபேஷ் பொகாடே தலைமையிலான மருத்துவ குழு உடனடியாக சென்று அவருக்கு சிகிச்சை அளித்தது.

அப்போது, அவருக்கு சுயநினைவு இருந்தது. அவருடைய முக்கிய உறுப்புகள், மருத்துவ பரிசோதனையின்போது, இயல்பு நிலையிலேயே இருந்தன என கூறப்படுகிறது. இதன்பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்