< Back
சிறப்புக் கட்டுரைகள்
தலையில் காயம்... குட்டியுடன் நேராக கிளினிக் சென்று சிகிச்சை பெற்ற குரங்கு: ஆச்சரிய சம்பவம்..!
சிறப்புக் கட்டுரைகள்

தலையில் காயம்... குட்டியுடன் நேராக கிளினிக் சென்று சிகிச்சை பெற்ற குரங்கு: ஆச்சரிய சம்பவம்..!

தினத்தந்தி
|
9 Jun 2022 3:54 PM IST

தலையில் காயத்துடன், குட்டியுடன் கிளினிகிற்கு வந்த குரங்கு ஒன்று தன் காயத்தை காட்டி சிகிச்சை பெற்ற சம்பவம் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் சாக்சுமாவில் மருத்துவர் அகமது நடத்தும் மருத்துவமனைக்கு குரங்கு ஒன்று தன் குட்டியுடன் வந்துள்ளது. இது வழக்கமான தனது சேட்டைகளை செய்வதற்காக வரவில்லை.

மருத்துவமனையில் குரங்கு அங்கும் இங்குமாக அலைந்துள்ளது. இதனை கண்ட மருத்துவர், பிற நோயாளிகளை வெளியேற்றி இருக்கிறார். இதையடுத்து உடனடியாக மருத்துவர் இருந்த பகுதிக்கு சென்ற குரங்கு, தன் தலையில் இருந்த காயத்தை காண்பித்துள்ளது. குரங்கை பரிசோதித்த மருத்துவர், அதற்கு முதலுதவி செய்து மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார்.

அப்போது, தனக்கு மட்டும் அல்ல... தனது குட்டிக்கும் காயம் என்பதை காட்டி தாய்ப்பாசத்தில் நெகிச்சி செய்திருக்கிறது. குட்டியின் காலில் காயம் இருந்ததை கண்ட மருத்துவர், அதற்கும் சிகிசை அளித்து அனுப்பிவைத்துள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளனர்.

குட்டியுடன் குரங்கு ஒன்று சிகிச்சை பெற்று சென்ற வீடியோ அடங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. குரங்கின் இந்த செயலையும், அதன் தாய் பாசத்தையும் சமூக வலைதளங்களில் கண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்