< Back
தேசிய செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த பள்ளிக்கூட மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பேருக்கு வலைவீச்சு
தேசிய செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பள்ளிக்கூட மாணவிக்கு பாலியல் தொல்லை; 4 பேருக்கு வலைவீச்சு

தினத்தந்தி
|
29 Sept 2022 12:15 AM IST

வீட்டில் தனியாக இருந்த பள்ளிக்கூட மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஹாவள்ளி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மைனர் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் வேலை விஷயமாக வெளியே சென்று இருந்தனர்.

மைனர் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சோ்ந்த பிரகாஷ்(வயது 22) என்ற வாலிபர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கு தனியாக இருந்த மாணவிக்கு, பிரகாஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மைனர் பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து மாணவி, வீடு திரும்பிய தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை அழுதபடி கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த மைனர் பெண்ணின் பெற்றோர் உடனடியாக இதுபற்றி என்.ஆர்.புரா போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ வழக்கும், உடன் சென்ற 3 நண்பர்கள் மீது வீட்டிற்குள் அத்துமீறி சென்றதாக கூறி வழக்கும் பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்