குற்றவழக்கில் தலைமறைவாக இருந்தவர் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
|குற்றவழக்கில் தலைமறைவாக இருந்தவர் 20 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா பகுதியை சோ்ந்தவர் நவ்சத் (வயது 46). இவர் கடந்த 2003-ம் ஆண்டு குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் இவர் ஜாமீனில் வெளியே வந்தாா்.
அதன்பின்னர் நவ்சத் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதுதொடர்பான வழக்கு பண்ட்வால் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. நவ்சத்தை, விட்டலா போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நவ்சத் பதுங்கி இருப்பதாக விட்டலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கோழிக்கோட்டிற்கு சென்றனர். அப்போது பெரம்பாரே பகுதியில் பதுங்கி இருந்த நவ்சத்தை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அங்கிருந்து அவரை பண்ட்வாலுக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
பின்னர் நவ்சத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.