< Back
தேசிய செய்திகள்
சிவலிங்கேகவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது; முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ வைரல்
தேசிய செய்திகள்

சிவலிங்கேகவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது; முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ வைரல்

தினத்தந்தி
|
16 March 2023 2:45 AM IST

சிவெலிங்கே கவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது என்று முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ உரையாடல் வைரலாகியுள்ளது.

ஹாசன்:

சிவெலிங்கே கவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியை விட்டு செல்ல கூடாது என்று முன்னாள் மந்திரி ரேவண்ணா பேசிய ஆடியோ உரையாடல் வைரலாகியுள்ளது.

ஆடியோ வைரல்

ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சிவலிங்கேகவுடா, விரைவில் காங்கிரசில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவலிங்கேகவுடாவை, முன்னாள் முதல்-மந்திரி ரேவண்ணா சமாதானம் செய்வது போன்ற, ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் பேசிய முன்னாள் மந்திரி ரேவண்ணா கூறியதாவது:-

சிவலிங்கேகவுடா மற்றும் எனக்குமான நட்பு 18 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. யாருடைய பேச்சையும் சிவலிங்கேவுடா கேட்க கூடாது. எந்த விபரீத முடிவையும் எடுக்க கூடாது. எங்களால் எந்த தொந்தரவும் ஏற்பட்டாது. இதுவரை யாரேனும் தொந்தரவு கொடுத்திருந்தால் எங்களிடம் கூறுங்கள், உடனே நடவடிக்கை எடுக்கப்படும். உங்களை நம்பிதான் ஜனதா தளம் (எஸ்) கட்சி செயல்பட்டு வருகிறது. கட்சியை விட்டு செல்லவேண்டாம். ஜனதா தளம் (எஸ்) கட்சி எப்போது உங்களுக்கு துணையாக இருக்கும். இன்னும் சில நாட்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.

இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

பழைய ஆடியோ

இந்த ஆடியோவிற்கு பதில் அளிக்கும் வகையில், சிவலிங்கேகவுடா பேசிய ஆடியோவும் வைரானது. அதில் அவர் காங்கிரசில் இணைய இருப்பதாகவும், காங்கிரஸ் சார்பில் அரிசிகெரே தொகுதியில் போட்டியிட்டு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும், பேசியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதற்கு சிவலிங்கேகவுடா மறுப்பு தெரிவித்துள்ளார். இது பழைய ஆடியோ. யாரோ வேண்டுமென்று குரல் மாற்றி பேசி வெளியிட்டுள்ளனர். நான் யாரிடமும் இதுபோன்று பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்