< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் .. பின்னணியில் யார் ? போலீசார் தீவிர விசாரணை
|15 April 2023 10:51 PM IST
கேரளாவில் ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட 67 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காசர்கோடு,
கேரள மாநிலம் காசர்கோடு, கல்லுராவி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை சோதனை செய்ததில், ஒரு பையில் 67 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்கூட்டரை ஓட்டி வந்த புஞ்சாவியை சேர்ந்த ஹாரிஸை கைது செய்து விசாரித்தபோது, விஷூ மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு பல்வேறு இடங்களில் விநியோகம் செய்வதற்காக, வளைகுடா நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.