< Back
தேசிய செய்திகள்
பாலக்காடு ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் - 2 பேர் கைது
தேசிய செய்திகள்

பாலக்காடு ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் - 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Feb 2023 6:29 AM IST

பாலக்காடு ரெயில் நிலையத்தில் ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு,

கேரளா மாநிலம் பாலக்காடு ரெயில்வே நிலையத்தில் நேற்று காலை 6 மணியளவில் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அந்த ரெயிலில் பாலக்காடு ெரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் சோதனையில ்ஈடுபட்டனர்.

அப்போது பயணிகள் பெட்டியில் 2 நபர்கள் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்தார்கள். அவர்களை பாதுகாப்பு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்களை சோதனை போட்டபோது, உடலில் கட்டுக்கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்தம் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த பணத்திற்கு அவர்கள் 2 பேரிடமும் உரிய ஆவணங்கள் இல்லை.

இதையடுத்து அந்த ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்கள், மதுரையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 32), கணேசன் (35) என்பதும், பெங்களுருவில் இருந்து காயங்குளத்திற்கு பணத்தை மறைத்து வைத்து கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ரெயில்வே போலீசார், பாலக்காடு வருமான வரித்துறை அதகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிகாரிகள், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்