நண்பரை வீட்டில் தங்க வைத்ததில் ஏற்பட்ட விபரீதம்; உரிமையாளரின் மகள் 4 மாத கர்ப்பம்
|மராட்டியத்தில் வீட்டில் வாடகைக்கு தங்கிய நபர் தனது நண்பரின் மகளை பலமுறை பலாத்காரம் செய்த வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் காத்கோபர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 3 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இதில், வீட்டின் உரிமையாளர் தனது நண்பர் ஒருவரை 3-வது மாடியில் வாடகைக்கு தங்க அனுமதித்து உள்ளார்.
இந்நிலையில், 2017-ம் ஆண்டு ஜூலையில், வீட்டு உரிமையாளரின் மகள் வயிறு வலிக்கிறது என வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனால், பதறி போன அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், மருத்துவ பரிசோதனையில் சிறுமி நாலரை மாத கர்ப்பம் என தெரிய வந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மகளிடம் விசாரித்து உள்ளனர்.
அதில், 2017-ம் ஆண்டு மார்ச்சில் வீட்டில் யாரும் இல்லாதபோது, 3-வது மாடியில் இருந்த அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்த விவரங்களை கூறி உள்ளார். ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த பலாத்கார சம்பவம் மீண்டும் தொடர்ந்து உள்ளது.
இதுபற்றி யாரிடமும் கூற வேண்டாம் என வாடகைக்கு இருந்த நண்பர் வீட்டு உரிமையாளரின் மகளிடம் கூறியுள்ளார் என குடும்பத்தினரிடம் மகள் விளக்கி உள்ளார்.
இதன்பின்னர் அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது. அதனை மரபணு பரிசோதனை செய்ததில், சிறுமியும், வாடகைக்கு தங்கிய நபரும் அந்த கருவின் உயிரியியல் பெற்றோர் என்ற விவரம் இறுதி அறிக்கையில் தெரிய வந்தது.
6 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தின்போது, சிறுமி மைனர் என நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லை என கூறி போக்சோ வழக்கில் இருந்து அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், ஒவ்வொரு கர்ப்பிணிக்கும், மற்ற கர்ப்பிணிகளுக்கு ஏற்படுவது போன்ற வாந்தி, குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்பது அவசியமில்லை. அதனால் வயிறு வலி ஏற்படும் வரை பாதிக்கப்பட்டவரின் நடத்தையில் எந்தவித மாற்றமும் கவனிக்கப்படாமல் இருந்திருக்க கூடும் என கோர்ட்டு கூறியது.
அந்த பாதிக்கப்பட்ட நபர், தொடர்ச்சியாக பல முறை குற்றவாளியால் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என்பதற்கு உறுதியான மற்றும் தொடர்ச்சியான நிரூபணங்கள் உள்ளன என கூறி அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது என உத்தரவில் தெரிவித்து உள்ளது.