ஒடும் ரெயில் பாலியல் வன்கொடுமை : எதிர்த்த பெண் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கொடுமை
|அரியானாவில் பாலியல் வன்கொடுமை முயற்சியை எதிர்த்த பெண் ஒருவர் ஓடும் ரெயில் இருந்து தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் நெஞ்சை பதற வைத்து உள்ளது
தோஹானா
மந்தீப் கவுர் ( வயது 30 ) என்றபெண் தனது 9 வயது மகனுடன் அரியானா மாநிலம் ரோஹ்தக்கின் லகான் மஜ்ராவிலிருந்து தோஹானாவுக்கு ரெயில் சென்று கொண்டு இருந்தார்.அவர் சென்ற ரெயிலில் பெரும்பாலான பெட்டிகள் காலியாகவே இருந்தன.
தோஹானா ஸ்டேஷன் வந்ததும் 9 வயது சிறுவன மட்டும் அழுது கொண்டே இறங்கி உள்ளான் மந்தீப் கவுரை காணவில்லை இதுகுறித்து மந்தீப் கவுர் கணவ்ர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
விசாரணையில் ரெயில் பயணத்தின் போது தோஹானா ஸ்டேஷன் வருவதற்கு முன் அதில் பயணம் செய்த சந்தீப் என்பவர் மந்தீப் கவுரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தீவிரமாகவும், மீண்டும் மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயன்றார். இதனால் கோபம் அடைந்த சந்தீப் மந்தீப் கவுரை ஓடும் ரெயில் இருந்து தூக்கி எறிந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே கவுர் உயிரிழந்தார்.
தொடர்ந்து சந்தீப்பும் ரெயில் இருந்து குதித்து உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார்.பின்னர் கைது செய்யப்பட்டார்.