< Back
தேசிய செய்திகள்
பஞ்சாப்: சிறைக் கைதியை கர்ப்பமாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்-மந்திரி வீட்டின் முன் போராட்டம் - பாதிக்கப்பட்ட பெண் மிரட்டல்
தேசிய செய்திகள்

பஞ்சாப்: சிறைக் கைதியை கர்ப்பமாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்-மந்திரி வீட்டின் முன் போராட்டம் - பாதிக்கப்பட்ட பெண் மிரட்டல்

தினத்தந்தி
|
31 July 2022 5:42 PM GMT

பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பஞ்சாப் முதல் மந்திரி இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்போவதாக அந்த பெண் மிரட்டல் விடுத்தார்.

சண்டிகர்,

2016இல் போலீஸ் விசாரணையின் போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த தன்னை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் குற்றம் சாட்டினார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய பண மோசடி புகாரில் அந்த பெண்ணுக்கு 2012-2018 காலகட்டத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின் 16 மாதங்கள் அவர் சிறையில் இருந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

2016ஆம் ஆண்டு விசாரணைக் கைதியாக நான் இருந்தபோது, அமிர்தசரஸ் சிறைக் கண்காணிப்பாளராக இருந்த ஆஷிஷ் கபூருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டதாக அந்தப் பெண் கூறினார்.

இதனால், தான் கர்ப்பமானதாகவும், அந்த அதிகாரி சிறையில் வைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும் அதன்பின், தனக்கு ஜாமின் கிடைக்க உதவி செய்ததாகவும் தெரிவித்தார்.

இதனிடையே ஓடும் காரில் தன்னை அந்த போலீஸ் அதிகாரியும் அவரது நண்பரும் சேர்ந்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தொடர்ந்து மொகாலி போலீஸ் ஸ்டேசனில் இருந்தபோதும் அந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்துள்ளனர்.

இதுதொடர்பாக எப் ஐ ஆர் பதிவுசெய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆஷிஷ் குமார் என்ற மூத்த அதிகாரி மற்றும் சமர்பால்(டிஎஸ்பி) ஆகிய இருவரும் என் குடும்பத்தை மிரட்டி பணம் பறித்தனர். என் சகோதரனின் மனைவிக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்படும் என மிரட்டினர் என்று அந்த பெண் கூறினார்.

இந்த நிலையில், அமிர்தசரஸ் சிறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் கபூர் மற்றும் கூட்டாளிகள் மீது பத்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் இல்லத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்போவதாக அந்தப் பெண் மிரட்டல் விடுத்தார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்