< Back
தேசிய செய்திகள்
அரியானா: வெந்நீரில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு
தேசிய செய்திகள்

அரியானா: வெந்நீரில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு

தினத்தந்தி
|
23 Feb 2024 8:01 PM IST

கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்த குழந்தையின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

சண்டிகர்,

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தின் சோஹ்னா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், நேற்றைய தினம் இரண்டரை வயது ஆண் குழந்தை, கொதிக்கும் வெந்நீரில் தவறி விழுந்தது. அந்த குழந்தையின் தாய் ஒரு வாளியில் வெந்நீரை எடுத்து வைத்துவிட்டு, வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தபோது அக்குழந்தை வெந்நீரில் விழுந்துள்ளது.

இதனால் அந்த குழந்தையின் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தார்ஜுங் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர்.

அங்கு அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்