< Back
தேசிய செய்திகள்
இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் - அரியானா மந்திரி உறுதி
தேசிய செய்திகள்

இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படும் - அரியானா மந்திரி உறுதி

தினத்தந்தி
|
26 Feb 2024 4:53 PM IST

நபே சிங் ரத்தே சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று சட்டசபையில் சட்ட ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சண்டிகார்,

அரியானாவில் இன்று சட்டசபை கூட்டத்தின் கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் அரியானா மாநில தலைவர் நபே சிங் ரத்தே சுட்டு கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பி, சட்ட ஒழுங்கு குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தால் பா.ஜ.க. ஆளும் மாநிலமான அரியானாவில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றம்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து அவர்களது கேள்விக்கு பதிலளித்த அரியானா மந்திரி அனில் விஜ், சி.பி.ஐ. விசாரணையில் மட்டுமே அவை திருப்தி அடையும் என்றால், வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைப்போம் என்று உறுப்பினர்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார்.

முன்னதாக, ரதி கொலை விவகாரத்தை எதிர்க்கட்சியான காங்கிரஸ் எழுப்பியதால், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சி தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்