அரியானா: டேட்டிங் செயலி வழியே அறிமுகம்; ஓட்டலுக்கு அழைத்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபர்
|அரியானாவில் டேட்டிங் செயலி வழியே சந்தித்த நபர், ஓட்டலுக்கு அழைத்து நண்பருடன் சேர்ந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
குருகிராம்,
அரியானாவின் குருகிராம் நகரில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் டேட்டிங் செயலி வழியே புதிதாக ஒருவருடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். அவருடன் சாட்டிங் செய்து வந்த நிலையில், இளம்பெண்ணை ஓட்டல் ஒன்றுக்கு வரும்படி அந்நபர் அழைத்திருக்கிறார்.
இதனால், செக்டார் 50-ல் உள்ள ஓட்டலுக்கு அவர் சென்றார். அப்போது, ஓட்டல் அறையில் இருந்த 2 பேர் அவருக்கு உணவு கொடுத்தனர். அதனை வாங்கி சாப்பிட்ட இளம்பெண் சுயநினைவை இழந்துள்ளார்.
இதனை பயன்படுத்தி கொண்டு, அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவும் எடுத்துள்ளனர். அந்த பெண் சுயநினைவை அடைந்ததும், அந்த நபரிடம் சண்டை போட்டுள்ளார். அதற்கு, வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பி விடுவேன் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
அதன்பின் அந்த இடத்தில் இருந்து தப்பி, வீட்டுக்கு வந்த இளம்பெண், போலீசில் நடந்த விசயங்களை புகாராக அளித்திருக்கிறார். இதுபற்றி அடையாளம் தெரியாத 2 நபர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.