< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்: அரியானா முதல்-மந்திரி
|21 Aug 2022 9:07 PM IST
நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்று அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்,
அரியானாவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப் பசு மாடு வாங்க விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பேசிய அவர், இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறோம். இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிக்கு 'நாட்டு மாடு' வாங்க ரூ.25,000 வழங்கப்படும். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் சுமார் 2,800 பேருக்கு நாட்டுப் பசு மாடு வாங்கும் திட்டத்துக்குப் பதிவு பதிவு செய்துள்ளனர். நாங்கள் 'பசு கிசான் கிரெடிட் கார்டு' என்ற புதிய திட்டத்தையும் தொடங்கினோம். அதில் இதுவரை 42,000 கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன" என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.