< Back
தேசிய செய்திகள்
நடிகையும், பாஜக தலைவியுமான சோனாலி மாரடைப்பால் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

நடிகையும், பாஜக தலைவியுமான சோனாலி மாரடைப்பால் உயிரிழப்பு

தினத்தந்தி
|
23 Aug 2022 4:07 PM IST

டிக்டாக் பிரபலமும், பாஜக தலைவியுமான சோனாலி கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

பனாஜி,

அரியானா மாநில பாஜக கட்சியை சேர்ந்தவர் சோனாலி பஹட் (வயது 42). இவர் டிவி விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும், டிவி நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். மேலும், வெப் தொடரிலும் சோனாலி நடத்துள்ளார். இவர் 2019-ம் ஆண்டு அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆடம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சோனாலி டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள செயலிகளில் தனது வீடியோக்களை வெளியிட்டு அதிக பார்வையாளர்களையும் பெற்றுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலி பஹட்டிற்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சோனாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோனாலி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சோனாலி பஹட் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்