< Back
தேசிய செய்திகள்
அரியானாவில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு வந்தது
தேசிய செய்திகள்

அரியானாவில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு வந்தது

தினத்தந்தி
|
22 Feb 2024 3:34 PM IST

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு சபாநாயகர் இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளார்.

சண்டிகர்,

அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக மனோகர் சிங் லால் கத்தார் உள்ளார். அரியானாவில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அரியானா சட்டபேரவையில் எடுத்து வைக்கப்பட்டு காரசார வாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அரியானாவில் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்தது. அதன்படி, பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் விவாதத்திற்கு வந்தது. சபாநாயகர் கியான் சந்த் குப்தா இதற்காக இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளார்.

அரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜகவுக்கு 41 எம்.எல்.ஏக்களும் கூட்டணி கட்சியான ஜன்னாயக் ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பெரும்பான்மைக்கு 46 எம்.எல்.ஏக்கள் தேவை. பாஜக கூட்டணிக்கு தற்போது 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது.

முன்னதாக எதிர்க்கட்சிகள் ஆண்டுதோறும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் தான் அரசின் சாதனைகள் எடுத்துரைக்க முடியும் என்ற முதல் மந்திரி மனோகர் சிங் லால் கட்டார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்