< Back
தேசிய செய்திகள்
குடிக்க பணம் கேட்டு தொல்லை; அண்ணனை கொன்ற வாலிபர்
தேசிய செய்திகள்

குடிக்க பணம் கேட்டு தொல்லை; அண்ணனை கொன்ற வாலிபர்

தினத்தந்தி
|
6 Sept 2022 8:36 PM IST

குடிக்க பணம் கேட்டு தொல்லை செய்த அண்ணனை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விஜயாப்புரா:

விஜயாப்புரா மாவட்டம் சடச்சனா தாலுகா தேவரநிம்பரகி கிராமத்தை சேர்ந்தவர் ஜக்கேஷ். இவரது தம்பி ராகுல். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஜக்கேஷ் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். அவர் மதுகுடிக்க அடிக்கடி தம்பி ராகுலிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுபோல் ஏற்கனவே குடிபோதையில் இருந்த ஜக்கேஷ் மேலும் மதுகுடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

ஆனால் ராகுல் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகுல், ஜக்கேசை கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொன்றார். இதுதொடர்பாக சடச்சனா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்