< Back
தேசிய செய்திகள்
வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சி - ராகுல் காந்தி
தேசிய செய்திகள்

வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சி - ராகுல் காந்தி

தினத்தந்தி
|
13 Aug 2023 1:45 PM IST

வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்தது மகிழ்ச்சி என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.

வயநாடு,

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர், நேற்று தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடுக்கு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்த நிலையில், வயநாடு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேசியதாவது:-

தகுதிநீக்கம் செய்யப்பட்டபோது ஒட்டுமொத்த வயநாடு தொகுதி மக்களும் எனக்கு துணையாக இருந்தனர். என்னுடைய குடும்பத்தின் ஒருபகுதியாகவே வயநாடு மக்களைப் பார்க்கிறேன். வயநாடு தொகுதிக்கு மீண்டும் வந்ததை மகிழ்ச்சியாக உணர்கிறேன். பழங்குடியினரை எந்த கட்டுப்பாடுகளும் விதித்து அடக்கக் கூடாது; முழு இந்தியாவும் அவர்களுக்கானது.

நமது பழங்குடியின சகோதர சகோதரிகள் இந்த நாட்டின் அசல் உரிமையாளர்கள், மேலும் இந்த நாட்டின் அசல் உரிமையாளர்கள் நிலம், காடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். 'வனவாசி' என்பது காட்டில் உள்ளவர்கள், நீங்கள் ஒருபோதும் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்