< Back
தேசிய செய்திகள்
பணத்தை திரும்ப கேட்ட பெண் மீது சுத்தியலால் தாக்குதல்; வாலிபர் கைது
தேசிய செய்திகள்

பணத்தை திரும்ப கேட்ட பெண் மீது சுத்தியலால் தாக்குதல்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
8 July 2022 8:56 PM IST

உப்பள்ளி அருகே, கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண்ணை சுத்தியலால் தாக்கி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

உப்பள்ளி;

ரூ.30 ஆயிரம் கடன்

தார்வார் (மாவட்டம்) டவுன் ஆசாத் நகரில் வசித்து வருபவர் கதீஜா. அதே பகுதியில் வசித்து வந்தவர் இக்பால்(வயது 28). இந்்த நிலையில் இக்பால், கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர், கதீஜாவிடம் கடனாக ரூ.30 ஆயிரம் வாங்கியுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் இக்பால் கடனை திரும்ப கொடுக்கவில்லை.

இந்த நிலையில் இக்பால் அந்த ஊரில் இருந்து வெளியேறி, வெளியூரில் இருந்து வந்துள்ளார். கதீஜா பலமுறை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட போதெல்லாம் இக்பால் சரியாக பதில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் உபநகர் அருகே இக்பால் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கதீஜா, இக்பாலிடம் கொடுத்த பணத்தை உடனடியாக திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

சுத்தியலால் தாக்குதல்

இதனால் இக்பால், கதீஜா ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இக்பால், கட்டுமான வேலைக்காக வைத்திருந்த சுத்தியலால் கதீஜாவை சரமாாியாக தாக்கியுள்ளார். இதனால் கதீஜா தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் கதீஜாவை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து உபநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்போில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து இக்பாலை கைது செய்தனர். மேலும் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்