< Back
தேசிய செய்திகள்
சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் 2 பெண்களின் உடல்கள்: போலீசார் விசாரணை
தேசிய செய்திகள்

சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் 2 பெண்களின் உடல்கள்: போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
5 July 2023 1:31 AM IST

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தில் சாலையோரம் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு பாதி எரிந்த நிலையில் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு இருந்தது. இரு பெண்களும் கொலை செய்யப்பட்டு உடல்கள் வீசப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பச்சி ஜாஜ்ராவ் கிராமத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், புடான் மாவட்டத்தில் கக்ராலா நௌலி சாலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இரு பெண்களின் வயது சுமார் 35 இருக்கும். உடல்களை பிளாஸ்டிக் பைகளால் சுற்றப்பட்டு, சாலையோரத்தில் வீசியதாக தெரிகிறது, என்றார்.

இதனை தொடர்ந்து உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, அவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், வழக்கு பதிவு செய்து அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்