டெல்லி காட்டில் மீட்கப்பட்டது ஷரத்தாவின் எலும்பு, தலை முடி- டி.என்.ஏ. சோதனையில் கண்டுபிடிப்பு
|டெல்லி காட்டில் மீட்கப்பட்டது ஷரத்தாவின் எலும்பு, தலைமுடி தான் என டி.என்.ஏ. ேசாதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை அருகே உள்ள வசாய் பகுதியை சேர்ந்தவர் ஷரத்தா வாக்கர். இவர் கடந்த ஆண்டு டெல்லியில் அவரது காதலன் அப்தர் அமீனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அப்தாப் அமீன் கடந்த ஆண்டு மே மாதம் ஷரத்தாவை கொலை செய்து 36 துண்டுகளாக வெட்டி உடலை மெக்ராலி காட்டில் வீசியதாக டெல்லி போலீசார் கூறுகின்றனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் டெல்லி போலீசார் ஷரத்தாவின் காதலன் அப்தாப் அமீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் கொலை தொடர்பாக டெல்லி காட்டில் இருந்து ஷரத்தாவின் எலும்பு, தலை முடியை மீட்டு ஆய்வுக்கு அனுப்பி இருந்தனர். டி.என்.ஏ. சோதனையில் மீட்கப்பட்ட ஒரு எலும்பு, தலை முடி ஷரத்தாவுடையது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் பீரித் ஹூடா கூறுகையில், " ஷரத்தா கொலை வழக்கில், மைட்டோகாண்டிரியா சோதனை முடிவுகள் வந்து உள்ளன. ஒரு எலும்பு மற்றும் தலை முடி ஷரத்தாவின் தந்தை, சகோதரரின் டி.என்.ஏ.வுடன் ஒத்து போகிறது. " என்றார்.