< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரை
|19 Dec 2023 9:26 PM IST
இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமரை தொலை பேசி வாயிலாக தொடர்பு கொண்டு விவாதித்தார். இஸ்ரேல் -ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி தனது ' எக்ஸ்' வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்தும் கடல் சார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்தும் தனது கருத்தை பகிர்ந்ததாகவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதில் இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை எடுத்துரைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.