< Back
தேசிய செய்திகள்
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

தினத்தந்தி
|
8 May 2024 11:17 AM IST

சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவள் 15 வயது சிறுமி. இவளுக்கு சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் வாலிபர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் சிறுமியிடம் அந்த வாலிபர் நட்பாக பழகி வந்தார். கடந்த மாதம் 30-ந் தேதி சிறுமியை வாலிபர் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்தார். இதனையடுத்து அங்கு சென்ற சிறுமியை அந்த வாலிபர் அங்கு வைத்து பலாத்காரம் செய்தார்.

இதன் பின்னர் அந்த வாலிபர் கடந்த 4-ந்தேதி மீண்டும் சிறுமியை அழைத்தார். அப்போது வாலிபர் மற்றும் அவரது நண்பர் உள்பட 2 பேரும் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் பல சந்தர்ப்பங்களில் 2 பேரும் சேர்ந்து சிறுமியை தொந்தரவு செய்ததால் சிறுமி போலீசில் புகார் அளித்தார்.

இந்தப்புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பால்கர் மாவட்டத்தில் உள்ள தலசேரி பகுதியில் பதுங்கி இருந்த 20 வயதுடைய 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும், போலீசார் இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 9-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்